பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்!

vinoth
சனி, 6 செப்டம்பர் 2025 (10:54 IST)
தமிழ் சினிமாவில் நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய பழம்பெரும் பாடல் ஆசிரியர் பூவை செங்குட்டுவன் தன்னுடைய 90 ஆவது வயதில் வயது மூப்புக் காரணமாக காலமாகியுள்ளார். 1967 ஆம் ஆண்டு முதல் 90 களின் இறுதி வரை இவர் தமிழ் சினிமாவில் சுமார் 4000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

எம் ஜி ஆரின் புதிய பூமி படத்தில் இடம்பெற்ற ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ பாடல் அவரைக் கவனிக்கத்தக்க பாடல் ஆசிரியராக ஆக்கியது.  மேலும் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ மற்றும் ’திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ மற்றும் ‘திருப்புகழைப் பாட பாட’  உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

இது தவிர அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோருக்காக அரசியல் பிரச்சாரப் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபகாலமாக பெரம்பூரில் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுக் காலமாகியுள்ளார். அவருக்குப் பூவை தயாநிதி, ரவிச்சந்திரன் என்ற மகன்கள், கலைச்செல்வி, விஜயலட்சுமி ஆகிய மகள்கள் உள்ளனர். அவரது மனைவி காந்திமதி ஏற்கனவே காலமாகிவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments