Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

KGF புகழ் தினேஷ் மங்களூரு காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

Advertiesment
கேஜிஎஃப்

vinoth

, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (15:36 IST)
ஒட்டுமொத்த இந்தியாவிலும் வசூல் வேட்டை நடத்திய படம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப்’. அந்த படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட அதன் பின்னர் பிரபலமானார்கள். அப்படி அந்த படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவில் பிரபகமானார் நடிகர் தினேஷ் மங்களூரு.

அவர் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் நிலைமை மோசமானதால் அவர் வீட்டுக்கே அழைத்து வரப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது. சினிமாவில் கலை இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கிய தினேஷ், அதன் பின்னர் நடிகராகி தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிப்பதைக் குறைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன?... சமந்தா பதில்!