லோகா இரண்டாம் பாகத்தில் அவர்தான் ஹீரோ… மேடையில் அறிவித்த துல்கர் சல்மான்!

vinoth
சனி, 6 செப்டம்பர் 2025 (08:48 IST)
ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் டோம்னிக் எழுதி இயக்கியுள்ள ‘லோகா’ திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை துல்கர் சல்மான் தன்னுடைய ‘wayfrayers films’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று தற்போது 100க்கும் மேற்பட்ட திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படம் 7 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

இந்த படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தபோது பேசிய துல்கர் சல்மானிடம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த டோவினோ தாமஸ் ஏன் வரவில்லை எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த துல்கர் “அடுத்த பாகத்தின் வெற்றி சந்திப்பின் போது அவர்தான் இங்கு முன்னே இருப்பார். நாங்களெல்லாம் அவர் பின்னால் இருப்போம்” எனக் கூறியுள்ளார். லோகா படம் ஐந்து பாகங்களாக உருவாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கரின் இந்த பேச்சால் இரண்டாம் பாகத்தில் டோவினோ தாமஸ்தான் கதாநாயகனாக இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments