தமிழ் சினிமாவில் நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய பழம்பெரும் பாடல் ஆசிரியர் பூவை செங்குட்டுவன் தன்னுடைய 90 ஆவது வயதில் வயது மூப்புக் காரணமாக காலமாகியுள்ளார். 1967 ஆம் ஆண்டு முதல் 90 களின் இறுதி வரை இவர் தமிழ் சினிமாவில் சுமார் 4000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
எம் ஜி ஆரின் புதிய பூமி படத்தில் இடம்பெற்ற நான் உங்கள் வீட்டுப் பிள்ளை பாடல் அவரைக் கவனிக்கத்தக்க பாடல் ஆசிரியராக ஆக்கியது. மேலும் தாயிற் சிறந்த கோயிலுமில்லை மற்றும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் மற்றும் திருப்புகழைப் பாட பாட உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
இது தவிர அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோருக்காக அரசியல் பிரச்சாரப் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபகாலமாக பெரம்பூரில் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுக் காலமாகியுள்ளார். அவருக்குப் பூவை தயாநிதி, ரவிச்சந்திரன் என்ற மகன்கள், கலைச்செல்வி, விஜயலட்சுமி ஆகிய மகள்கள் உள்ளனர். அவரது மனைவி காந்திமதி ஏற்கனவே காலமாகிவிட்டார்.