Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் ரிலீஸ் போட்டியில் விஜயகாந்த் மகன் படம்

பொங்கல் ரிலீஸ் போட்டியில் விஜயகாந்த் மகன் படம்
, வியாழன், 14 டிசம்பர் 2017 (15:45 IST)
பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்களின் பட்டியலில், விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘மதுர வீரன்’ படமும்  இணைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மீனாட்சி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி,  பால சரவணன், மைம் கோபி, மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின்  ‘ஸ்கெட்ச்’, சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’, விமலின் ‘மன்னர் வகையறா’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ ஆகிய  படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமான கெட்டப்பில் நடிகை ரெஜினா; ரசிகர்கள் அதிர்ச்சி!