Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாமக எம்பி. அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்!

Advertiesment
பாமக எம்பி. அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்!
, வியாழன், 11 நவம்பர் 2021 (19:50 IST)
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது.

மீபத்தில் இப்படம் குறித்து பாமக எம்.பி. அன்புமணி விமர்சித்திருந்தார். அதில், ஜெய்பீம்#JaiBhim திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
webdunia

இதற்கு நடிகர் சூர்யா பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்ற தங்களின் கருத்தை முழுவதுமாக ஏற்கிறேன்; அதேபொல், படைப்பு  சுதந்திரத்திற்கு அச்சுருத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் தங்கள் புரிதலுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டைக் காட்சிகளில் நடித்த விஜய் பட நடிகை