Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓய்வுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர் !

ஓய்வுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர் !
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:56 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியின் முக்கியமான விளையாட்டு வீரர் டிவில்லியர்ஸ். இவர் நடப்பு ஐபிஎல்-2021 -14 வது சீசனில் சிறப்பாக விளையாடும் நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோபையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியிலிருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது டி -20 லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவரை தென்னாப்பிரிக்கா அணியில் டி-2- உலகக் கோப்பையில் விளையாட வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் உலகக் கோப்பை டி-20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடுவீர்களா எனக் கேட்டார். நான் ஐபிஎல் தொடருக்குப் பின்னர், எனது உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு பேசுவோம் எனக் கூறிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் அவசர ஆலோசனை !