Publish Date: Wed, 14 Oct 2020 (19:07 IST)
Updated Date: Wed, 14 Oct 2020 (19:13 IST)
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்தாண்டு ஜூன் மாதம் லண்டனில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுவரை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி-20 கோப்பை, ஆசியக் கோப்பை,சாம்பியன் ஷிப் கோப்பை போன்ற தொடர்களே நடந்துள்ள நிலையில், முதன்முதலாக உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 9 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர்கள் சாம்பியன்ஷிப் போட்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு அணியும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும். அதேசயம கொரொனா பரவல் காரணமாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.