Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்போதைக்கு ஓய்வு இல்லை... 2 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவேன் - கிறிஸ்கெயில்

Advertiesment
இப்போதைக்கு ஓய்வு  இல்லை... 2 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவேன்  - கிறிஸ்கெயில்
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (14:14 IST)
உலக கிரிக்கெட் அரங்கில்  வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயிலுக்கு(41 வயது தற்போது)  எப்போதுமே தனி இடமுண்டு.

அவரது பேட்டிங் பார்முலாவே அதிரடி தான். எந்த அணிக்கு எதிராகவும் துணிச்சலாகவும் மிகவுமா சவலால எந்த அணி பந்துவீச்சையும் அவர் எளிதாக எதிர்கொள்ளுவார்.

குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்து எதிரணிக்கு இக்கட்டான நேரத்தில் குடைச்சல் தந்து தனது அணியை ஆபத்தில் இருந்து மீட்பார்.

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் -13 வது சீசனில் அவர்து அதிரடி ஆட்டம் வெளிப்பட்டது.  இதில், 7 இன்னிங்ஸில் விளையாடி, 288 ரன்கள் எடுத்துள்ளார். ஒருமுறை சதம் நழுவவிட்டு 99 ரன்கள் உள்ளிட்ட 3 அரைசதங்கள் விளாசினார்.

இந்நிலையில் இன்று புத்தாண்டு தினத்தையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை வெளிட்டுள்ளார்.

அதில், நான் 45 வயதுக்கு முன் ஓய்வு பெரும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டுவரவுள்ள 2021 ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி-20 போட்டி மற்றும் 2022 ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் தேசிய அணிக்காக இவரது அதிரடி தொடரும்.

இதுகுறித்து அவர் பிரபல சேனலுக்கு கூறியுள்ள பேட்டியில், நான் இன்னும் இரண்டு உலகக்கோப்ப தொடரில் விளையாடுவேன். இன்னும் 5 ஆண்டுகள் விளையாடுவேன். அதற்கு முன் ஓய்வை அறிவிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவை இந்தியா பந்தாடும் எனக் கூறியதை கேலி செய்தனர் - பாகிஸ்தான் வீரர்