Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாஸ் படத்தின் பரபரப்பான அறிவிப்பு: தனுஷ் ரசிகர்கள் குஷி!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (22:29 IST)
நடிகர் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களான பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் ரிலீசாக உள்ளன
 
இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது
 
இந்த படத்தின் சீன்புரோ’ என்ற பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் இந்த பாடல் விவேக்-மெர்வின் இசையில் தனுஷ் பாடி உள்ளதாகவும் சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து தனுஷ் பாடிய இந்த பாடலை கேட்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். நாளை மாலை ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments