Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 64 படத்தில் இருந்து விலகிய நடிகரும் இணைந்த நடிகரும்...

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (22:24 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஒரு பிரபல நடிகர் விலகி, அவருக்கு பதிலாக இன்னொரு நடிகர் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
‘தளபதி 64’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் என்பவர் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் என்பவர் இணைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது அர்ஜுன் தாஸ் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்தோணி வர்கீஸ் விலகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து படக்குழுவினர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும் அர்ஜூன் தாஸ் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் என்பதால் இந்த படத்தில் அவரது நடிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் டிசம்பர் முதல் வாரம் தளபதி 64 படக்குழுவினர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பழமையான சிறையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதால் விஜய் உள்பட படக்குழுவினர் வரும் புதன்கிழமை கர்நாடக மாநிலத்திற்கு படப்பிடிப்பிற்காக செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments