Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்டி அஸ்வந்த்தின் குறும்பு - வைரலாகும் தனுஷின் D40 ஷூட்டிங் வீடியோ!

குட்டி அஸ்வந்த்தின் குறும்பு - வைரலாகும் தனுஷின்  D40 ஷூட்டிங் வீடியோ!
, புதன், 13 நவம்பர் 2019 (11:02 IST)
சின்னத்திரையில் பிரபலமான அஸ்வந்த் தற்போது படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் மகனாக  சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அஸ்வந்த் தற்போது தனுஷின் D40 படத்தில் நடித்து வருகிறார். 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன்  இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் குட்டி அஸ்வந்த்தின்  குறும்பு  ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தனுஷுடன் என்ன ரோலில் இவர் நடிக்கிறார்...படத்தின் டைட்டில் உள்ளிட்ட தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் அம்மா ஆனார் நடிகை ரேஷ்மி மேனன் - குவியும் வாழ்த்துக்கள்!