Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் பாதிக்கபட்டவர் குணமடைந்தார் : விஜயபாஸ்கர் டுவீட் !

Advertiesment
கொரோனாவால் பாதிக்கபட்டவர் குணமடைந்தார் : விஜயபாஸ்கர் டுவீட் !
, புதன், 25 மார்ச் 2020 (21:41 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் சுமார் 519 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். 

அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக அம்மாநில  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் 2 வதாக கொரோனா தொற்று உறுதி செட்டப்பட்ட ஒருவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கிக் கடன் தவணையைச் செலுத்துவதில் சலுகைகள் ?