இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வேட்டுவம் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நாகப்பட்டிணம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்து வருகிறது.
இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் மேல் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்று ஸ்டண்ட் கலைஞரின் இறுதி நிகழ்வில் மரியாதை செலுத்திய ரஞ்சித் பேசும்போது “வழக்கமாக க்ராஷ் காட்சி எடுக்கும்போது என்னனென்ன திட்டமிடல்களோடு எடுப்பார்களோ, அப்படிதான் திட்டமிட்டு எடுத்தோம். ஆனாலும் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துவிட்டது. மோகன் ராஜனின் மரணம் எங்களை வெகுவாக பாதித்துள்ளது. திறமையான ஒரு கலைஞரை இழந்த துயரத்தில் உள்ளோம்” என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.