Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் பா ரஞ்சித் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

Advertiesment
Pa Ranjith

vinoth

, வியாழன், 12 ஜூன் 2025 (07:55 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக தற்போதிருக்கும் பா.ரஞ்சித் 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

அண்மையில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் ஆர்யா நடிக்கிறார்.

இந்நிலையில் பா ரஞ்சித்தின் மனைவி அனிதாவின் தாயார் பூங்கொடி இயற்கை எய்தியுள்ளார். இது சம்மந்தமான செய்தி சமூகவலைதளத்தில் பகிரப்பட, ரஞ்சித்தின் நலம்விரும்பிகள் அவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!