ஆடை படத்தில் பி சுசிலா – 70 வருடத்துக்கு முந்தைய பாடல் !

வியாழன், 11 ஜூலை 2019 (15:22 IST)
ஆடை படத்தில் பி சுசிலா ஒரு பாடலைப் பாடியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி துணிச்சலான நடித்துள்ளதற்கு பாராட்டும் கிடைத்துள்ளது.. தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியான சில நாட்களிலேயே இந்த டீசர் யுட்யூப்பில் 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் முன்னனிக் கதாநாயகர்களின் படங்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நிகரானது. இந்த அமோக வரவேற்பால் இந்தப் படத்தை வெளியிட திரையுலகில் நல்ல போட்டி இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்தப் படத்தை (ஜூலை) 19 ஆம் தேதி வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர். இதனை அமலாபால் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தப்படத்தில் பழம்பெரும் பாடகி பி சுசிலா ஒருப் பாடலை பாடியுள்ளார். 70 வருடத்துக்கு முன் அவர் பாடிய பழையப் பாடலை இந்தப் படத்தில் மீண்டும் பாடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அந்தப் பாடலை அவர் பாடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பி சுசிலா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பாடியுள்ளார் என்பது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிகில் விஜய்க்கு தந்தை இந்த பிரபலமா! - லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியான விஜய் ரசிகர்கள்!