"ட்ரஸ் போடாமல் பிறந்தநாள் கொண்டாடும் அமலாபால்" - "ஆடை" சென்ஷேஷனல் ட்ரெய்லர்!

சனி, 6 ஜூலை 2019 (16:23 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும்  "ஆடை"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. அதனையடுத்து படத்திற்கு தனிக்கைக்குழு  "A" சான்றிதழ் வழங்கியது. பின்னர் வெளியான டீசர் வீடியோ அனைவரது கவனத்தையும் ஒரே நேரத்தில் திசைதிருப்பியது. ஆடையின்றி வெறும் உடம்பை காணபித்து நடித்திருந்த அமலா பால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் மக்கள் மத்தியில் இப்படம் பரவலாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், அமலாபால் எதற்கெடுத்தாலும் பெட் கட்டும் குணாதிசயம் உடையவராக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஆடையின்றி நடித்து தனது துணிச்சலான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இந்த சீசன் ஓவியாவாக மாறியது இவர் தான் - ப்ரோமோ வீடியோ!