Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாண காட்சியின் போது 15 பேரை கணவராக உணர்ந்தேன் - அமலாபால்

Advertiesment
நிர்வாண காட்சியின் போது 15 பேரை கணவராக உணர்ந்தேன் - அமலாபால்
, சனி, 6 ஜூலை 2019 (20:36 IST)
ஆடை படத்தில்  நாயகி அமலாபால் பிரதான கதாநாயகியாக நடித்துள்ளார். மேயாத மான் பட இயக்குநர்  ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜே ரம்யா, விவேக், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இந்நிலையில் இன்று ஆடை படத்தின் இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட அமலாபால் இப்படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
 
நடிகை அமலாபால்  கூறியதாவது :
 
பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் திரைத்துறையில் இருந்து விலக முற்பட்டேன். அந்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கருவை படித்தேன். அதன்பின்னர் ஒரு ஹோட்டலில் ரத்னகுமார் என்னிடம் கதை சொன்னார். இக்கதையும் எனக்குப் பிடித்திருந்தது. என் 9 வருட வாழ்க்கையில் இப்படம் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
 
ஆடை படத்தில் நிர்வாண காட்சிகள் எடுக்கும் போது இடத்தில் என்னை சுற்றி 15 பேர் இருந்தனர். அதில் லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.பாஞ்சாலிகு 5 கனவர்கள் என்று சொல்வார்கள்.அதுபோல் எனக்கு 15 பேர் கணவர்களாக இருப்பதாக உணர்ந்தேன்.அவர்கள் கொடுத்த பாதுகாப்பான உணர்வு என்னை பயமின்றி நடிக்க வைத்தது. என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனிதாவுக்கு தக்க செருப்படி கொடுத்த கமல் - குறும்படம் ரெடி!