Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கலாமா? ஓவியாவின் கேள்வியால் பரபரப்பு

Advertiesment
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கலாமா? ஓவியாவின் கேள்வியால் பரபரப்பு
, ஞாயிறு, 26 ஜூலை 2020 (09:22 IST)
பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது நடிகை ஓவியா தான். பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரவ், ரித்விகா மற்றும் முகின் ஆகியோர்களை விட நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா பெரும்புகழ் பெற்றுள்ளார் என்பதும் அவருக்குத் தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியா ’பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்யலாமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ஓவியாவின் இந்த டுவிட்டுக்கு பல்வேறு பதில்களை நெட்டிசன்கள் அளித்து வருகின்றனர். பிக்பாஸ் இல்லை என்றால் நீங்கள் இந்த அளவுக்கு எப்படி புகழ்பெற்று இருக்க முடியுமா? என்று சிலரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரை டார்ச்சர் செய்வதால் தடை செய்யலாம் என்றும் பலர் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை டிஆர்பிக்காக டார்ச்சர் செய்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். ஓவியாவின் இந்த இரண்டு டுவிட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் உலகப் புகழ்பெற்ற ஒரு நடிகையே, அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் பாதிக்கப்பட்டது உண்மையா? டுவிட்டரில் விஷால் விளக்கம்