Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை: பரபரப்பு தகவல்

வலிமை படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை: பரபரப்பு தகவல்
, செவ்வாய், 21 ஜூலை 2020 (17:57 IST)
தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டி, சென்னை உள்பட ஒருசில இடங்களில் நடந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருவதாகவும், வில்லனாக பிரபல கன்னட நடிகர் கார்த்திகேயா நடித்து வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மலையாள பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பியர்லே மன்னே என்பவர் நடித்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ‘வலிமை’ படத்தில் தனக்கு ஒரு சின்ன கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் கிடைத்ததை அடுத்து தனது கணவர் அதிக சந்தோஷப்பட்டதாகவும், தனது கணவர் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் கூறினார் 
 
மேலும் தல அஜித் அவர்கள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்றும் அவருடன் பழகிய அந்த சில நாட்கள் தனக்கு மறக்க முடியாத நாட்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னாவை இப்படி ஒரு கோலத்தில் இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க - வைரலாகும் Unseen போட்டோ!