சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பிணஅரசியல்பழனிச்சாமி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை விடுபட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, நிகழ்ந்த மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இவை வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த 444 இறப்புகளையும் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விடுபட்ட 444 மரணங்களுக்கு கொரோனாவால் நிகழ்ந்தவையாக கருதி, அந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். எனவே தமிழகத்தில் மொத்த மரண எண்ணிக்கை 3,144 ஆக உள்ளது. இது தற்போது பூதாகாரமாய் வெடித்துள்ளது.
மரணங்கள் மறைக்கப்பட்டதாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை மக்கள் மத்தியிலும் பீதியையும் ஆதங்கத்தையும் எழுப்பியுள்ளது. இதனால் #பிணஅரசியல்பழனிச்சாமி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அரசை விமர்சித்து வருகின்றனர் இணையவாசிகள்.