Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமையை நெருங்க முயற்சிக்கும் ஓடிடி! மசிவாரா போனி கபூர்!

வலிமையை நெருங்க முயற்சிக்கும் ஓடிடி! மசிவாரா போனி கபூர்!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:43 IST)
வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஓடிடி தளங்களில் இருந்து பேச்சுவார்த்தைக்கு நெருங்குவதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

ஆனால் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் படம் ரிலீஸாகததால் இந்த படத்தில் நிறைய முதலீடுகளை போட்டுள்ள போனி கபூருக்கு இப்போது பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ஓடிடி நிறுவனம் ஒன்று வலிமை படத்தை மிகப்பெரிய தொகைக்கு கேட்டுள்ளதாம். ஆனால் அஜித்தோ படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படியாவது ஹீரோவாகனும்… விஜய் மேனேஜரை தட்டி தூக்கிய இளம் நாயகன்!