Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் எடுத்த அதிரடி முடிவு!

விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் எடுத்த அதிரடி முடிவு!
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (14:12 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா லியோ படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். இப்போது அந்த நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக மீண்டும் அஸர்பைஜான் பறந்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளி ப்ரேக் கூட எடுத்துக் கொள்ளாமல் படப்பிடிப்பை முடித்துவிட அஜித் வலியுறுத்தியுள்ளாராம். அதனால் தொடர்ந்து அஜர்பைஜானில் ஷூட்டிங் நடைபெறும் என சொல்லபப்டுகிறது. விடாமுயற்சி படத்தை விரைவில் முடித்து ரிலீஸ் செய்யவேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை பாதிக்கும் மூன்று விஷயங்கள்… சமந்தா நம்பிக்கை பதில்!