Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு மருத்துவப் பரிசோதனை… அஜித்தின் ஏற்பாடு!

விடாமுயற்சி படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு மருத்துவப் பரிசோதனை… அஜித்தின் ஏற்பாடு!
, புதன், 1 நவம்பர் 2023 (07:13 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய அஜித், தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக அஜர்பைஜானில் உயிரிழந்தார் என்பதால் இந்த மருத்துவப் பரிசோதனைக்கு அஜித் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“என் படத்தை பார்த்த முதல்வரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” –கங்கனா நெகிழ்ச்சி!