Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுவா? ப்ளான் போட்ட படக்குழு!

விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுவா? ப்ளான் போட்ட படக்குழு!
, வியாழன், 19 அக்டோபர் 2023 (07:51 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து துபாயில் அடுத்த கட்ட ஷூட்டிங்கும் அதன் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு அங்கு முக்கியமான காட்சிகளையும் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை எப்படியாவது ஜனவரி 30 க்குள் முடித்து ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என படக்குழு திட்டமிட்டு கடுமையாக உழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் அருண்குமார் இணையும் படத்தின் ப்ரோமோஷூட்… லேட்டஸ்ட் அப்டேட்!