Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகரின் திருமணத்தில் கடைப்பிடிக்கப்படாத தனிமனித இடைவெளி: நெட்டிசன்கள் கண்டனம்

Advertiesment
பிரபல நடிகரின் திருமணத்தில் கடைப்பிடிக்கப்படாத தனிமனித இடைவெளி: நெட்டிசன்கள் கண்டனம்
, திங்கள், 27 ஜூலை 2020 (09:45 IST)
பிரபல நடிகரின் திருமணத்தில் கடைப்பிடிக்கப்படாத தனிமனித இடைவெளி
பிரபல தெலுங்கு நடிகர் நிதின் தனது நீண்ட நாள் காதலியான ஷாலினியை நேற்று ஹைதராபாத்தில் திருமணம் செய்தார். இந்த திருமணம் ஊரடங்கு நேரத்தில் நடைபெறுகிறது என்பதால் இரு வீட்டார் தரப்பில் இருந்து மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் 
 
இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் இந்த திருமணத்திற்கு தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். மணமகன், மணமகள் உள்பட இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாருமே கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும் ஒரு சிலரை தவிர வேறு யாரும் மாஸ்குகள் அணியவில்லை என்றும், அதேபோல் தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மாஸ்க் அணிவது உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில் முன்னணி நடிகர் ஒருவரே அந்த விதிகளை காற்றில் பறக்க விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்: பரபரப்பு தகவல்