Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்… மூன்று முறை கருக்கலைப்பு செய்தார் -நடிகை மீது புகார் சொன்னவர் கைது!

Advertiesment
நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்… மூன்று முறை கருக்கலைப்பு செய்தார்  -நடிகை மீது புகார் சொன்னவர் கைது!
, சனி, 25 ஜூலை 2020 (12:53 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவரான லாவண்யா திரிபாதி மீது அபாண்டமான புகார்களை சொன்னவர் சைபர் க்ரைம் போலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சசிக்குமார் நடித்த பிரம்மன் மற்றும் சந்தீப் கிஷான் நடித்த மாயவன் ஆகிய படங்களில் நடித்த நடிகை லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவரை தான்  2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும், தன் மூலம் மூன்றுமுறை கர்ப்பமாகி அதைக் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்து யுட்யூப் புகழ் நடிகர் சுனிஷித் சில பேட்டிகளில் கூறி அதிர்ச்சிகளை கிளப்பினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த லாவண்யா தன் புகழைக் கெடுத்து களங்கப்படுத்த சுனிஷித் இவ்வாறு பேசுவதாகக் கூறி அவர் மீது சைபர் கிரைம் போலீஸாரிடம் மூன்று மாதங்களுக்கு முன்னர் புகாரளித்தார். அந்த புகாரை அடுத்து இன்று சுனிஷித் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளின் கையில் சானிட்டரி பேட் –விஷ்ணு விஷால் காதலி பகிர்ந்த மீம்!