Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாண்டையார் குடும்பத்தின் சம்பந்தி ஆனார் டிடிவி தினகரன்: பரபரப்பு தகவல்

Advertiesment
வாண்டையார் குடும்பத்தின் சம்பந்தி ஆனார் டிடிவி தினகரன்: பரபரப்பு தகவல்
, ஞாயிறு, 26 ஜூலை 2020 (07:22 IST)
வாண்டையார் குடும்பத்தின் சம்பந்தி ஆனார் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கல்வி வள்ளல் வாண்டையார் குடும்பத்தினருடன் சம்பந்தம் செய்ய இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கல்வி வள்ளல் துளசி அய்யா வாண்டையார் அவர்களின் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மகனுமான ராமநாதன் என்பவருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் மகள் ஜெயஹரினி என்பவருக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதனை அடுத்து டிடிவி தினகரன் மற்றும் வாண்டையார் குடும்பத்தினர்கள் சம்பந்தி ஆகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துளசி அய்யா வாண்டையார் அவர்களின் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பெரும் செல்வாக்கு பெற்றவர் என்பது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் என்பதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு இந்த திருமணம் அரசியல் ரீதியிலும் மிகப்பெரிய நன்மையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தினர் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சசிகலாவும் இந்த திருமணத்திற்கு பரிபூரண சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இந்த திருமணத்திற்கு அவர் பரோலில் வெளியே வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திருமணம் காரணமாக அமமுக-காங்கிரஸ் கூட்டணி அமையவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா பாதிப்பு 1.61 கோடியை தாண்டியதால் பரபரப்பு