Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 17 ஜூலை 2025 (10:40 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் நித்யா மேனன். கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

இப்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘தலைவன் தலைவி’ மற்றும் தனுஷுடன் ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தேசிய விருது பெற்ற நாள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

அதில் “தேசிய விருது விழா நாளுக்கு முன்பாக நான் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது நான் மாட்டு சாணத்தை அள்ளும் காட்சியில் நடித்தேன். அடுத்த நாள் நான் தேசிய விருதைப் பெறும் போது என் விரல் நகங்களுக்கிடையில் மாட்டு சாணம் இருந்தது என்பது வித்தியாசமான உணர்வு. வாழ்க்கை அழகானது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments