14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில், தற்போது பந்துவீச்சிலும் சாதனை நிகழ்த்தியதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் வைபவ் சூர்யவன்ஷி மிக அபாரமாகப் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலமாக, டெஸ்ட் வரலாற்றில் மிகவும் இளைய வயதில் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தும் போது அவருக்கு வயது 14 வருடம் மற்றும் 107 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனுஷி என்பவர் தான் 15 வயதில் தனது முதல் விக்கெட்டை கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வீழ்த்தினார். இவருடைய சாதனையை தற்போது வைபவ் சூர்யவன்ஷி முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.