Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IC814: The kandhagar hijack தொடருக்கு எழுந்த கண்டனம்… பயங்கரவாதிகள் பெயரை வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு!

Advertiesment
IC814: The kandhagar hijack தொடருக்கு எழுந்த கண்டனம்… பயங்கரவாதிகள் பெயரை வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு!
, புதன், 4 செப்டம்பர் 2024 (08:49 IST)
IC814: The kandhagar hijack என்ற பெயரில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் ஒரு தொடர் வெளியானது. 1999 ஆம் ஆண்டு இந்திய விமானம் ஒன்று பயங்கரவாதக் குழுக்களால் கடத்தப்பட்டது சம்மந்தமான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், அரவிந்த் சுவாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் பயங்கரவாதிகளின் உண்மையான பெயரைக் கதாபாத்திரங்களுக்கு வைக்காமல் வேறு பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த பெயர்கள் எப்படி இந்துக்களின் பெயர்களாக இருக்கலாம் என சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து நெட்பிளிக்ஸின் இந்திய பிரிவு உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “பயங்கரவாதிகளின் உண்மையான பெயர் தொடரின் ஆரம்பத்தில் வெளியிடப்படும்” எனக் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி பதில்!