Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டோ ஷுட்டிலும், கார் ரேஸிலும் கவனம்.! திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்.!

Advertiesment
EPS Stalin

Senthil Velan

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:43 IST)
வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 

வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன என்றும் போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது என்று எடப்பாடி தெரிவித்துள்ளார். 

இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன என்றும் இது மிகுந்த கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று அவர் கூறியுள்ளார்.

 
அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு முதல்வர் மு.க ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 நாட்களாக முடங்கியிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை.. இப்போதைய நிலை என்ன?