Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 25 February 2025
webdunia

அஜித் பேசும் ’அந்த’ வசனம்? – நேர்கொண்ட பார்வை டீசரில் ரசிகர்களுக்கு அட்வைஸ் !

Advertiesment
அஜித் பேசும் ’அந்த’ வசனம்? – நேர்கொண்ட பார்வை டீசரில் ரசிகர்களுக்கு அட்வைஸ் !
, வியாழன், 13 ஜூன் 2019 (10:10 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார். அஜித்தின் 59 ஆவது படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று இப்போது கவனம் ஈர்த்துள்ளது. டீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?’ எனப் பேசியுள்ளார். இந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் ரசிகர்களுக்காக இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்பாஹ்! பிரியா பவானி சங்கரா இது! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!