Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித், சூர்யாவை முந்திக்கொண்ட கார்த்தி – கைதி ரிலிஸ் எப்போது ?

அஜித், சூர்யாவை முந்திக்கொண்ட கார்த்தி – கைதி ரிலிஸ் எப்போது ?
, வியாழன், 13 ஜூன் 2019 (09:46 IST)
கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் கைதி படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாராட்டுக்களை குவித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மிகப்பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியேக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகியப் படங்கள் ரிலிஸாவதால் அந்தப் படங்களுக்கு முன்னதாகவே ஜூலை 19 ஆம் தேதி கைதிப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கைதியை அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் இயக்குனர் வேண்டாம்: அஜித் மறுப்பு தெரிவித்தது ஏன்?