Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதி-அருண்ராஜா காமராஜ் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

உதயநிதி-அருண்ராஜா காமராஜ் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
, சனி, 16 அக்டோபர் 2021 (13:32 IST)
உதயநிதி-அருண்ராஜா காமராஜ் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
உதயநிதி ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இந்த படத்தில் ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன் மயில்சாமி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீச்சில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த மிருணாளினி ரவி!