Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்ட்டிகிள் 15 ரீமேக் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!

ஆர்ட்டிகிள் 15 ரீமேக் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:50 IST)
உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இயக்குனர் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம்… யுவன் ஷங்கர் ராஜா இசை!