Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

Advertiesment
நெல்சன் வெங்கடேசன்

vinoth

, சனி, 21 ஜூன் 2025 (11:15 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்போது அதர்வா மற்றும் நிமிஷாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் பல தாமதங்களுக்குப் பிறகு நேற்று இந்த படம் ரிலீஸானது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளைக் கடத்தல் செய்யும் குழுவினரை சுற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பே படத்துக்கு நல்லதொரு பேச்சு இருந்தது. இருந்தும் நேற்று முதல் நாளில் இந்த படம் சுமார் 40 லட்சம் அளவுக்குதான் தமிழ்நாட்டில் வசூலித்துள்ளது. ஆனால் விடுமுறை நாட்கள் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!