Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

Advertiesment
சிம்பு

Siva

, புதன், 11 ஜூன் 2025 (18:03 IST)
சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும், அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த பிப்ரவரி மாதமே அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் அவருடைய பிறந்தநாளின் போது வந்தது. ஆனால், இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவில்லை; குறைந்தபட்சம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சில நாட்களாக சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், முதல் கட்ட படப்பிடிப்பு எண்ணூர் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்தப் படத்தை வெற்றிமாறன் குறுகிய கால தயாரிப்பாக இயக்கி முடித்து விடுவார் என்றும், 'விடுதலை 2' அளவுக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது. 
 
ஏனெனில், சிம்புவுக்கு அடுத்தடுத்த படங்கள் தயாராக இருப்பதால், சிம்பு ஆரம்பத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு வெற்றிமாறன் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும், இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்