Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… இன்று ரிலீஸ் ஆகும் ஐந்து படங்கள்...!

Advertiesment
தமிழ் சினிமா

vinoth

, வெள்ளி, 20 ஜூன் 2025 (08:54 IST)
இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு கலவையான ஆண்டாகவே அமைந்துள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே நேரத்தில் எதிர்பார்க்காத வெற்றியை குடும்பஸ்தன் மற்றும் டூரிஸ்ட் பேமிலி போன்ற கதையை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் கமல் – மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ மண்ணைக் கவ்வியது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் வெற்றி சதவீதம் என்பது இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்குக் குறைவுதான்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஐந்து விதவிதமான படங்கள் ரிலீஸாகின்றன. தனுஷின் குபேரா, அதர்வாவின் DNA மற்றும் வைபவ்வின் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ ஆகிய மூன்று நேரடித் தமிழ்ப் படங்களும், அமீர்கான் நடித்துள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற டப்பிங் படமும் மற்றும் அனிமேஷன் படமான ‘எலியோ’வும் ரிலீஸாகின்றன. இப்படி வெவ்வேறு ஜானர்களில் படங்கள் ரிலீஸாவது சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஒன்றாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!