Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

Advertiesment
தமிழ் சினிமா

vinoth

, திங்கள், 7 ஜூலை 2025 (13:58 IST)
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் இயக்குனர் ராமின் பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவான ‘3BHK’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படங்கள் முதல் நாளில் தமிழ்நாட்டளவில் சுமார் 40 லட்சம் மற்றும் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளன.

பறந்து போ. இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி, நகைச்சுவை அம்சம் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்காலப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதிலிருந்து வெளியேறுவது குறித்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் முதல் வார இறுதியில் ‘பறந்து போ’ திரைப்படம் 3 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் சித்தார்த்தின் 3BHK படம் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!