நேற்று முன் தினம் வெளியான படங்களில் இயக்குனர் ராமின் பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவான 3BHK உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படங்கள் முதல் நாளில் தமிழ்நாட்டளவில் சுமார் 40 லட்சம் மற்றும் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளன.
பறந்து போ. இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி, நகைச்சுவை அம்சம் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்காலப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதிலிருந்து வெளியேறுவது குறித்த படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையி முதல் நாளில் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களை அடுத்து இந்த படத்துக்குக் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நேற்று விடுமுறை நாளான சனிக்கிழமை படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. சுமார் 60 லட்ச ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் இந்த படம் வசூலித்துள்ளது.