தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை நயந்தாரா. இவர் நடிப்பில் இயக்குநர் கோபி நயனார் இயக்கத்தில் வெளியான அறம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்பொழுது அறம் 2 படத்தை கோபி நயனார் எடுக்க உள்ளதாகவும் இதில் நயன்தாரா மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி போராட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர்களும், நடிகைகளும் சினிமாவில் மட்டும் பேசுவதோடு நின்று விடுகிறார்கள். மக்கள் பிரச்ச்னைகள் கண்முன் வருகிறபோது கண்டும் காணாத மாதிரி இருந்து விடுகிறார்கள்.
கோடி ரூபாய் மதிப்புள்ள கேரவனுக்குள் அடைந்து கொண்டு மக்களுக்காக போராடப் போகிறேன் என வசனம் பேசிக்கொண்டிருந்தால் கட்சி தொடங்கிய நிலையில் சில நடிகர்களை ஓரங்கட்டிய தற்போதைய மூத்த நடிகர்களைப் போலவே இவர்களையும் ஓரங்கட்டி விடுவார்கள்.
காவிரி, விவசாயம், வறுமை, போன்ற எதற்கும் குரல் கொடுக்காதவர்களிடம் யாரோ அரசியல் ஆசையைக் கிளப்பிவிட இப்போது இவர்களிடமும் அந்த அரசியல் மோகம் தொற்றிகொண்டது.
அரசியலில் கால் பதிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு பிறகு இதில் இறங்குவதுதான் நாட்டுக்கும் நல்லது அவர்களின் துறைக்கும் நல்லது. அவர்களின் வளர்ச்சிக்கும் நல்லது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.