விஜய்க்கு வைகோ ஆதரவா....?

வியாழன், 8 நவம்பர் 2018 (12:36 IST)
தற்போது தீபாவளி அன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர்.
ஆளும் அரசை விமர்சனம் செய்ததால் கோபமடைந்துள்ள அதிமுக மேலும் இதுபற்றி தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறது.
 
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
சுதந்தரத்திற்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி படத்தில் அப்போதைய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
 
விஜய் நடித்த இப்படத்தில்  அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பட்டுள்ளது.
 
இது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சினிமாவாக எடுப்பதில் தவறொன்றுமில்லை. இதற்காக அரசு சம்ம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியில்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சர்காருக்கு அடுத்த ஆப்பு ரெடி!! அரசு வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை