Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் வீடு வாங்கிய நயன்தாரா? எங்கு தெரியுமா?

சென்னையில் வீடு வாங்கிய நயன்தாரா? எங்கு தெரியுமா?
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (19:31 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா சென்னையிலுள்ள போயஸ் கார்டனில் வீடு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நயன் தாரா. அவர் சந்திரமுகி, வில்லு, பில்லா,ஐரா, கோலமாவு கோகிலா, பிகில், தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் நடிப்பில் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது காதலர்களாக வலம் வரும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொண்டு, சென்னை போயஸ் கார்டனில்  4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடிபுக உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். அடுத்ததாக நயன்தாரா தனது காதலருடன் அங்கு வசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ படத்திற்கு தடை கோரி வழக்கு!