தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் அவரது அணி கலந்துகொண்டு வருகிறது. அப்போது அவரை ஒரு ஊடகவியலாளர் நேர்காணல் செய்ய வந்தபோது “எல்லோரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிது என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராவது சவாலானது. அதனால் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்துங்கள்; என்னை ப்ரமோட் பண்ணாதீங்க. நிச்சயமாக இந்தியாவில் இருந்து ஒரு f1 ரேஸர் வந்து உலகளவில் கவனம் ஈர்ப்பார்.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் கார் ரேஸ் அணியில் இணைந்த நரேன் கார்த்திகேயன் அஜித் பற்றி பேசியுள்ளார். அதில் “தமிழில் F1 படம் எடுத்தால் அதற்கு அஜித்தான் பொருத்தமானவராக இருப்பார்.50 வயதைக் கடந்தாலும் அவர் கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வமாக இருக்கிறார். இப்போது அவரது அணியில் நானும் இணைந்துள்ளேன். வெற்றி பெறுவதற்கான யுக்திகளை நாங்கள் வகுத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.