நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததற்கு, அவரது சம்பள எதிர்பார்ப்பே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பல தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அஜித்தின் சம்பள விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்வைக்கும்போது, அவர் ₹185 கோடி சம்பளம் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
தயாரிப்பாளர் லலித், அஜித்தின் சம்பளம் ₹125 கோடியாக இருந்தால் படம் தயாரிக்க தயாராக இருப்பதாகக் கூறியதாகவும், ஆனால் அஜித் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகப்படியான சம்பள எதிர்பார்ப்பு காரணமாக, பல தயாரிப்பாளர்கள் இந்த படத்திலிருந்து பின்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தில் அஜித்திடம் உண்மை நிலவரத்தை மறைக்கிறார்களா அல்லது அவர் நிஜமான வியாபார நிலவரத்தைப் புரிந்துகொள்ளவில்லையா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக, நடிகர்கள் தாங்களே சொந்தமாக படம் தயாரித்து, அதன் மூலம் சினிமா வியாபாரத்தின் நடைமுறை சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.