கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ரிலீஸானது. சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி என்பதால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
அதே போல படத்துக்கு முன்னோட்டமாக அமைந்த பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவையும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தன. ஆனால் படம் ரிலீஸுக்குப் பிறகு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. ஆனாலும் முதல் நாளில் ரெட்ரோ திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
முதல் நாளில் இந்திய அளவில் ரெட்ரோ திரைப்படம் 19.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நல்ல ஒரு முதல் நாள் வசூலாகப் பார்க்கப்படுகிறது. கலவையான விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே படத்தின் வெற்றி தோல்வி அமையும்.