Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 கோடி வசூலித்த நானியின் தசரா ஓடிடி வெளியீடு அறிவிப்பு!

100 கோடி வசூலித்த நானியின் தசரா ஓடிடி வெளியீடு அறிவிப்பு!
, வியாழன், 20 ஏப்ரல் 2023 (14:55 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுக்க சுமார் 38 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது 6 நாளில் 100 கோடி ரூபாய் வசூலில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் படம் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மொழிகளில் தசரா திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு.. என்ன காரணம்?