Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமன்னன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? லேட்டஸ்ட் தகவல்!

மாமன்னன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? லேட்டஸ்ட் தகவல்!
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:00 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் படத்துக்கான டிஜிட்டல் உரிமையாக சுமார் 23 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொகை, இதுவரை உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் அடுத்த படம் என்பதால் மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இப்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் படத்தை ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷின் மழுப்பல் பதில்!