Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீர்த்தி சுரேஷா இது?... சூப்பரான போட்டோக்களால் ரசிகர்கள் குஷி!

கீர்த்தி சுரேஷா இது?...  சூப்பரான போட்டோக்களால் ரசிகர்கள் குஷி!
, வியாழன், 20 ஏப்ரல் 2023 (09:38 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷிடம் ஒரு ரசிகர் எப்போது கல்யாணம் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு பதிலளித்த கீர்த்தி, “நல்ல மாப்பிள்ளையாக கிடைத்தால் கண்டிப்பாக செய்துகொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது அவர் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமான உடையில் வித்தியாசமான போஸ்கள்… அசத்தும் பூஜா ஹெக்டே!